fbpx
Homeபிற செய்திகள்கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரம குழந்தைகளுடன் சர்வசமய தீபாவளி கொண்டாட்டம்

கோவை சாந்தி ஆசிரமத்தில் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி விழா கடந்த 13 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று காலை முதல் மதியம் வரை குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், மருத்துவ பரிசோதனை, தீபாவளி புத்தாடைகள் பரிசளிப்பு, சத்தான உணவுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் சர்வசமய பிரார்த்தனை, சமயத் தலைவர்களின் வாழ்த்துரை போன்றவற்றால் சாந்தி ஆசனம் மிகுந்த கலகலப்புடன் இருந்தது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட விலக்கப்பட்ட இந்த ஏழை எளிய மக்களை அழைத்து அவர்களுக்கு வேண்டிய புத்தாடைகள், சத்தான உணவுகள், மருத்துவ உதவிகள், கல்வி வழிகாட்டுதல், மற்றும் கல்வி உதவித்தொகை இவற்றையெல்லாம் அளித்து பராமரித்து வரும் கோவை சாந்தி ஆசிரமத்திற்கு ஜமாத்தே இஸ்லாமின் கோவை கிளையின் சார்பாக வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்வதாக கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் அப்துல் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பல்லாண்டு காலமாக தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எங்களுக்கு பெருமையாகவும் மகிழ்ச் சியாகவும் இருக்கிறது.

சாந்தி ஆசிரமத்தின் தலைவர் மருத்துவர் வினு அறத்திற்கும் அவர்களின் குழுவினருக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் இறைவனின் நல்லருள் கிடைக்க வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img