கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ஏழாவது மற்றும் எட்டாவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
கே.பிஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமையில் நடை பெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.அகிலா கல்லூரி அறிக்கையை வாசித்தார்.
விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் துறை சார்ந்த 1121 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இதில் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் பட்டியலில் இடம் பிடித்த 6 பட்டதாரிகள் மற்றும் கல்லூரி துறைகளில் முதலிடம் பெற்ற 16 பட்டதாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் 28 மாணவர்கள் முதுகலை பொறியியல் துறைகளான கேட் கேம், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், ஸ்ட்ரக்ச்சுரல் இன்ஜினியரிங், விஎல்எஸ்ஐ டிசைன் துறைகளை சார்ந்தவர்கள், மற்றும் இளங்கலை பிரிவில் சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூ னிகேஷன் இன்ஜினியரிங் எலக்ட் ரிகல் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் பட் டம் பெற்றனர்.
கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூரு என்.ஏ.எல்&-ல் உள்ள மெட்டீரியல்ஸ் சயின்ஸ் பிரிவின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் வெங்கடேஸ்வரலு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அவர் பேசும்போது, மாணவர்கள் நல்ல வேலையில் உள்ளேன் என்ற வார்த்தை ஆசிரியர்களுக்கு பெருமை கொள்ளவைக்கும்.
அதே போல் தங்கள் கல்லூரிக்கும், பெற்றோர்க்கும், நாட்டிற்கும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும், என்றார். பிரதம விருந்தினராக கலந்து கொண்ட எல் அண்ட் டி வால்வ்ஸ் முழு நேர இயக்குனர் தலைமை நிர்வாகி கல்யாணராமன், பட்டமளிப்பு தின உரையாற்றினார்.
அவர் பேசும்போது, வெற்றிகரமான வாழ்க்கைக்கு சரியான திட்டமிடுதலும் சூழ்நிலைகளை சமாளிக்கும் திறமையும் எதை முதலில் செய்யவேண்டும் என்ற முன்னுரிமையை அறிந்து செய்யக் கூடிய வேலையை பற்றிய தெளிவுடன் செய்ய வேண்டும்.
மேலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே இருப்பதால் நாமும் தொ டர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்` என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேரா சிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பிற்பகலில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி அனைத்து துறைகளிலும் நடை பெற்றது.
இந்த மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது வேலை அனுப வங்களை பகிர்ந்து கொண்டனர்.



