Homeபிற செய்திகள்கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

கே.எம்.சி.ஹெச்.-ல் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் வரும் 29-ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து கே.எம்.சி.ஹெச். மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா கூறியதாவது:
இந்தியாவில் 2 பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பக புற்றுநோய் கண்டு பிடிக்கப்படுகிறது.

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப் பாற்ற முடியும். பொதுவாக எல்லா புற்றுநோய்களை யும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாம லிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், மார்பு, மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி (வலியுடன் அல்லது வலியில்லாமலும்), மார்ப கக்காம்புகளில் கசிவு, மார் பகக்காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகிய அறிகுறிகளில் ஏதாவதொன்று இருந்தா லோ, ரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.

இத்தகைய அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள பெண்க ளும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபி டித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனையாகும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான சிறிய மாற்றங்களை கூட முன்கூட்டியே கண்டுபிடித்து விடலாம். முன்கூட்டியே கண்டுபிடிக் கும்போது முழுமையாக குணப்படுத்திவிடலாம். மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் அளவிற்கு நவீன சிகிச்சை முறை வந்து விட்டது.

வித்தியாசத்தை துல்லிய மாக பார்க்க உதவும் முப் பரிமாண வசதியுடன் கூடிய மேமோகிராம் பரி சோதனை கருவி, திசு விறைப்பு தன்மையை அளவிட உதவும் அல்ட்ரா சோனோகிராபி இயந்திரம், 3ஜி எம்ஆர்ஐ, வேக்குவம் அசிஸ்டட் பயாப்சி ஆகி யவை அவற்றில் அடங்கும்.

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் வரும் 29-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ரூ.3400 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.1000 சலுகை கட்டணத்திலும், ரூ.1100 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.500 சலுகை கட்டணத்திலும் மேற்கொள்ளப்படுகிறது என்றார் டாக்டர் ரூபா.
விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன் பதிவிற்கும் போன் : 87548 87568, 0422 4324151 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img