fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனைக்கு இலசவ மருத்துவ உபகரணங்கள் ‘ஆல் தி சில்ரன்’ இல்லம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனைக்கு இலசவ மருத்துவ உபகரணங்கள் ‘ஆல் தி சில்ரன்’ இல்லம் வழங்கியது

ஆல் தி சில்ரன் மற்றும் அதன் தன்னார்வலர்கள் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக கொரோனா மருத்துவ உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்வு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள டீன் அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த மருத்துவ உபகரணங்களை மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஏ.நிர்மலாவிடம் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு கோவை அரசு மருத்துவமனையின் மயக்கவியல் துறையின் பேராசிரியர் மருத்துவர். கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் இந்த திட்டத்தின் திட்ட இயக்குனர் ரோட்டேரியன் காட்வின் பேசியதாவது:- சென்னை, வியசர்பாடியில் அமைந்துள்ளது ஆல் தி சில்ரன். இங்கு 100 – க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி, மருத்துவம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு அவர்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

ஆல் தி சில்ரன் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு எங்களின் டிரஸ்ட் மற்றும் அதன் தன்னார்வலர்கள் சார்பில் 200 ஆக்சிஜன் ஓட்ட மீட்டர்கள், 1,500 மறு சுவாச மாஸ்குகள், 500 சிபாப் மாஸ்குகள், 2,500 ஆக்சிஜன் பேஸ் மாஸ்குகள், 800 எண்டோட்ராஷியல் டியூப்ஸ் மற்றும் 2,500 முக கவசங்கள் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் திட்ட இயக்குனர் ரோட்டேரியன் காட்வின், ரோட்டரி குழுக்களின் பிரதிநிதி ரோட்டேரியன் சுமித் மற்றும் ஆல் தி சில்ரன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img