Homeபிற செய்திகள்கோவையில் மேம்பாலப் பணி தீவிரம்: அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

கோவையில் மேம்பாலப் பணி தீவிரம்: அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

கோவை அவிநாசி சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி யில் தூண்கள் கட்டுவதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.
அவிநாசி சாலையில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணி விரைவாக ந¬ டபெற்று வருகிறது.

306 தூண்களில் இதுவரை 272 தூண்கள் அமைக்கப்பட்டு விட் டன. மீதம் 34 தூண் களில் 22 தூண்கள் முக்கிய சந்திப்புகளான ஹோப் காலேஜ் சந்திப்பு, பன்மால் சந்திப்பு, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, எஸ்ஸோ பங்க் சந்திப்பு, நவ இந்தியா, இலட்சுமி மில், GKNM மருத்துவமனை, அண்ணா சிலை, ஜெயில் சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த 22 தூண்களும் அமைக்கப்பட்டால்தான் தொடர்ச்சியாக ஓடுதளங்களை அமைக்க இயலும். எனவே இந்த சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி, தற்காலிகமாக வேண்டிய இடத்தில் சிக்னல்கள் அமைத்து போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.

இதில் முதல் கட்டமாக, பன்மால் சந்திப்பில் தூண் அமைக்க ஏதுவாக போக்குவரத்தை மாற்றி யமைக்க, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

பீளமேட்டிலிருந்து பன்மால் சந்திப்பில் லிங்க் சாலை வழியாக ஜிவி ரெஸிடென்ஸி மற்றும் திருச்சி சாலை செல்லும் வாகனங்கள் கிருஷ்ணம் மாள் சந்திப்பிலேயே வலது புறம் பி.எஸ்.ஜி. மருத் துவமனை செல்லும் சாலை வழியாக சென்று லிங்க் சாலையில் இணைந்து பின் திருச்சி சாலைக்கு செல்லலாம்.

திருச்சி சாலை, ஜிவி ரெஸிடென்ஸி லிங்க் சாலையிலிருந்து, அவிநாசி சாலை நோக்கி பன்மால் சந்திப்பிற்கு வரும் வாகனங்கள், வலதுபுறம் திரும்பி சுப்பக்கோனார் சாலை வரதராஜபுரம் மெயின் சாலை வழியாக ஹோப் காலேஜ் சந்திப்பை அடைந்து விடலாம்.

அல்லது சுப் பக்கோனார் சாலை, மசக்காளிபாளையம் லிங்க் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து விடலாம். இவ்வாறு போக்கு வரத்து மாற்றியமைக்கப் படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img