பாரதியார் 139வது பிறந்தநாளான டிசம்பர் 11 அன்று பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக கஜானந்தா அறக்கட்டளை சார்பில் நாட்காட்டி வெளியீட்டு விழா கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து கோவை தமிழ்க் கல்லூரி முதல்வர் ஆன்மிக தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்புரையாற்றினார்.
பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும் சென்னை எஸ்ஐஇடி கல்லூரி பேராசிரியருமான பர்வீன் சுல்தானா ஞானம், தேச பக்தியில் பாரதி என்ற தலைப்பிலும் எழுத்தாளரும் இயக்குனருமான பாரதி கிருஷ்ண குமார், பாரதி பாடிய பெண்மை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.



