fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சைக்கிள் போட்டி

கோவையில் சைக்கிள் போட்டி

பள்ளி கல்வி துறையால் நடத்தப்படும் கோவை வருவாய் மாவட்ட அளவிலான மாணவ ,மாணவிகளுக்கான சைக்கிள் போட்டிகள் கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த போட்டியை பல முறை தேசிய போட்டிகளில் பங்கு பெற்றவரும் ,1993 ல் ஆசிய சைக்கிளிங் போட்டிக்கு தகுதி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவருமான கோவை லோகு (எ) லோகநாதன் துவக்கிவைத்தார்.

அவர் பேசுகையில் மாணவர்களுக்கு விளையாட்டு மிகவும் அவசியமான ஒன்று என்றும் பள்ளியில் கடைசி வரிசையில் இருந்த மாணவர்களையும் சமூகத்தில் முதல் வரிசையில் உட்கார வைக்க கூடிய ஆற்றல் படைத்தது . என விளையாட்டின் முக்கியத்துவத்தை அருமையாக விளக்கினார்.

இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சிபி ,ஜேம்ஸ் கென்னடி , விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img