Homeபிற செய்திகள்கோவையில் இலவச மருத்துவ முகாம்

கோவையில் இலவச மருத்துவ முகாம்

கோவை சுக்ரவார் பேட்டை பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் பெற்ற பொற் பணியாளர்கள் சங்கம், தமிழ் நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.ஜி மருத் துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பொதுமக் களுக்கு இலவசமாக பொது மருத்துவம், மகளிர் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் நல மருத்துவம், நுரையீரல் நல மருத்துவம் என பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ ஆலோச னைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டது

இதில் சான்றிதழ் பெற்ற பொற் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ராஜேஷ், அண்ணாதுரை, ரவி, பொதுச்செயலாளர் சுப்பையன் மற்றும் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத் தின் தலைவர் பிரகாஷ், கௌரிமனோகரி, கனகராஜ், ரமேஷ், ராஜேஷ், சுரேஷ், லட்சும ணன், ஜெயக்குமார், சந்தோஷ் மற்றும் பிஎஸ்ஜி மருத்துவமனை மருத் துவர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img