கோவையில் இயேசுவின் ஜெப ஊழியம் சார்பில் கிறிஸ்மஸ் கலைநிகழ்ச்சி எல்ஸி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயேசுவின் ஜெப ஊழியம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கிறிஸ்து வரலாற்றை தத்ரூபமாக நாடக வடிவில் நடித்து காண்பித்த நிகழ்வு இரத்தினபுரி எல்ஸி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கிறிஸ்மஸ் மாதம் என்றாலே மாதம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் பல்வேறு இடங்களில் கிறிஸ்துவின் பிறப்பை குறித்தான பாடல் நிகழ்ச்சி , நாடகம் , என்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன , இதன் தொடர்ச்சியாக கோவையில் இயேசுவின் ஜெப ஊழியம் சார்பில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
சிறப்பு பாடல்கள் , குறு நாடகங்கள், கிறிஸ்துவின் பிறப்பை கண்ணுக்கு முன் கொண்டு வந்த நாடகங்கள் என்று அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் அனைவரும் தத்ரூபமாக நடித்தும் பாடியும் காண்பித்தனர் . இதில் பாக்யா ஆஸ்டின் கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சிறப்பு செய்தி அளித்தார், மறைந்த இயேசுவின் ஜெப ஊழியத்தின் ஸ்தாபகர் பால்துரை ஐய்யாவின் ஊழிய பாதை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த சிறப்பு நிகழ்வில், ஊழியர்கள் மற்றும் சபை அங்கத்தினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



