fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இன்டேன் எல்பிஜி சமையல் எரிவாயு டிஜிட்டல் பில் அறிமுகம்

கோவையில் இன்டேன் எல்பிஜி சமையல் எரிவாயு டிஜிட்டல் பில் அறிமுகம்

கோவையின் இன்டேன் சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு இனி டிஜிட்டல் முறையில் பில்கள் வழங்கப்படும். நேற்று (மார்ச் 10) முதல் இது அமலுக்கு வந்தது.

இந்த புதிய முறை கோவை, சண்டிகர், ராஞ்சி, சூரத் நகரில் முதல் கட்டமாக அறிமுகமாகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமையை நோக்கி செல்வோம் என்ற முயற்சியில் காகித பயன்பாட்டினை குறைக்கும் நோக்கில் இது அமலாகிறது.

தற்போது இன்டேன் வாடிக்கையாளர்கள் தங்களது எரிவாயு பெறும்போது, காகித பில்களை பெற்று வருகின்றனர்.

இந்த புதிய திட்டத்தில், வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் குறுஞ்செய்தியை அனுப்பி தங்களது கைபேசியில் பெறலாம். அல்லது
https://cx.indianoil.in/ என்ற இணையத்திலும் பார்வையிடலாம்.

எனினும் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வழங்குபவரிடம் சிலிண்டருக்கான தொகையை அறிந்து கொண்டு பணம் தரலாம்.

வாடிக்கையாளர்கள் வழக்கமான பில்களைப் பெற விரும்பினால், இந்தியன் ஆயில் ஒன் ஆப் அல்லது எரிவாயு விநியோகஸ்தரிடம் தங்களது விருப்பத்தை தெரிவித்து பெறலாம்.

இவ்வாறு இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img