Homeபிற செய்திகள்கோவையில் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கோவையில் அரசின் சாதனைகள் புகைப்பட கண்காட்சி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச் சர் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, அரசின் ஓராண்டில் அரும் பணிகள் அணிவகுப்பு குறித்து சாதனைகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து பயன்பெறும் வண்ணம் கோவை மாவட்டத்தில் 10 நாட்களுக்கு “ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணை த்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் வ.உ.சி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற் றது.

இக்கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) ஜெயச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img