திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, கொங்கு நகர் பகுதி, எல்.ஆர்.ஜி ஆரம்ப சுகாதார நிலையத்தின் எல்லைக்குட்பட்ட மக்களுக்கு கொரோனா நோய்த் தொற்றி லிருந்து பாதுகாப்பு அளிக்க தன்னலம் பாராது அயராது பாடுபட்ட மருத்துவர் அருள்ராஜ் காலமானார்.
அவரது மறை வையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் மண்டல தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், விவசாயப் பிரிவுச் செயலாளர் கலைமகள் கோபால்சாமி, வார்டு செயலாளர்கள் அர்ஜுனன் மற்றும் குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



