Homeபிற செய்திகள்கே.பி.ஆர். மில் மாணவிகள் தொடர்ந்து சாதனை

கே.பி.ஆர். மில் மாணவிகள் தொடர்ந்து சாதனை

கோவை கே.பி.ஆர். பெண் தொழி லாளர்கள் கல்விப் பிரிவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளனர்.

இவர்களுள் பனிரெண்டாம் வகுப்பில் பயின்ற 116 மாணவிகளில் 4 மாணவிகள் 600 மதிப்பெண்களுக்கு 500க்கும் மேல் பெற்று கே.பி.ஆர். பெண் தொழி லாளர்கள் கல்வி பிரிவு, சாதனை மாணவிகள் பட்டியலில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களுள் பி.அனந்தலட்சுமி என்ற மாணவி 571 மதிப்பெண்கள் பெற்று முத லிடத்தை பெற்றுள்ளார். இவர்கள் முழு நேரமும் மில்லில் பணிபுரிந்து கொண்டே, மாலைநேர வகுப்பில் படித்து கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு இச்சாதனையை புரிந்துள்ளார்கள்.

இவர்களுடைய கல்விச் சாதனைகளை கே.பி.ஆர் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி பாராட்டினார்.

இம் மாணவிகளை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய எதிர் கால வாழ்வின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய மேற்படிப்பை கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் பயில்வதற்கான முழு கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கம் அளித்துள்ளார்.

பேருதவியை பெற்றுக் கொண்ட மாண விகளும் அவர்தம் பெற்றோர்களும் தங் களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img