கோவை கே.எம் .சி.ஹெச். மருத்துவமனை யில் வரும் 29-ம் தேதி உலக இருதய தினத்தை முன்னிட்டு, சிறப்பு இருதய ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் அக்டோபர் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமில் அதிக புகைப் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ள வர்கள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள், இரத்தத்தில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து மாரடைப்பு ஏற் படுவதை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெற்று குணம் பெறலாம்.
இந்த சிறப்பு முகாமில் ரூபாய் 4000 மதிப்புள்ள இருதய பரிசோதனைகள் ரூபாய் 1250/- க்கு செய்யப்படுகிறது.
இதில் சர்க்கரை நோய் பரிசோதனை, கொழுப்பு சத்தின் அளவு ,எக்கோ அல்லது டி.எம்.டீ, ஈ.சி.ஜி மற்றும் மருத்துவர் ஆலோசனை வழங்கப் படுகிறது.
முகாம் நடை பெறும் இடம் கே.எம் .சி.ஹெச். அவினாசி ரோடு, கே.எம் .சி.ஹெச். சிட்டி சென்டர், ராம்நகர், கே.எம் .சி.ஹெச். சூலூர் சென்டர், கே.எம் .சி.ஹெச். கோவில்பாளையம் சென்டர்.



