fbpx
Homeபிற செய்திகள்கேம்போர்டு பள்ளியின் மாணவர்கள் தலைவர், மாணவியர் தலைவி பதவியேற்பு

கேம்போர்டு பள்ளியின் மாணவர்கள் தலைவர், மாணவியர் தலைவி பதவியேற்பு

கோவை கேம்ஃபோர்டு இன்டர் நேஷனல் பள்ளியின் 12-வது மாண வர்கள் தலைவர், மாணவியர் தலைவி மற்றும் பள்ளி குழுத் தலைவர்கள் பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு விமானப்படையின் அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.நி தின் தலைமை விருந்தினராக பங் கேற்றார். அவர் பேசும்போது, தலை வரின் குணங்கள், பண்புகளையை எடுத்துரைத்தார்.

உயர்ந்த இலக்குகளுடன் கடுமையான உழைப்பு உச்சத்துக்கு கொண்டு செல்லும். எளிதாக தவறு செய்வதைவிட கடுமையாக இருந்தாலும் நல்ல பாதையை தேர்ந்தெடுத்து அறவழியில் செல்ல வேண்டும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

பள்ளிக் கவுன்சில் தலைவர்களாக தங்களது கடமையையும் நேர்மையுடன் நிறை« வற்றுவோம் என இளம் மாணவர் தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மாணவர் தலைவராக ஹர்ஷில் பாவிக் மோமாயாவும், மாணவிகளின் தலைவியாக சஞ்சனாவும் பொறுப்பேற்றனர்.

பள்ளித் தலைவர் அருள்ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், முதல்வர் பூணம் ஷயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img