fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் பொறியியல் கல்லூரி சார்பில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம்

கேபிஆர் பொறியியல் கல்லூரி சார்பில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம்

கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் மற்றும் மாவட்ட மீனவர் நலசங்கம் இணைந்து நடத்திய கொரோனா இலவச தடுப்பூசி முகாம், டவுன் ஹால் பகுதியில் நடைபெற்றது.

முகாமில் சுமார் 100 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந் நிகழ்ச்சி கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, வழிகாட்டுதலின் பெயரில், கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.அகிலா, கல்லூரி முதன்மை செயலர் டாக்டர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

டாக்டர் எம். எஸ். கார்த்திகேயன், சமூக சேவைகளின் ஒருங்கி ணைப்பாளர், முன்னாள் மாணவர் உறவுகள் அலுவ லகத் தலைவர் டாக்டர் பி.அனில்குமார், என்.எஸ்.எஸ்., யு.பி.ஏ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர். சரவணன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

என்எஸ்எஸ், யுபிஏ, எஸ்ஏபி-க்கான தன் னார்வலர்கள் முகாம் நடத் துவதற்கு உதவினர்.

படிக்க வேண்டும்

spot_img