Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச்-ல் ரோஸ் தின விழா

கேஎம்சிஹெச்-ல் ரோஸ் தின விழா

கோவை கேஎம்சிஹெச்-ல் உலகத்தரமான அதிநவீன புற்றுநோய் மருத்துவ மையம் 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

அன்று முதல் இன்று வரை புற்றுநோயுடன் மனவுறுதியுடன் போராடி குணமடைந்தவர்களையும் நோயிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்களை பாராட்டும் வகையிலும், புற்று நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் வருடா வருடம் ரோஸ் தினம் கொண்டா டப்படுகிறது.

புற்றுநோய் மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், நோயாளிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மனரீதியாக ஏற்படும் தாக்கத்தினால் புற்றுநோய் குறித்த அச்சம் இன்னமும் நீடிக்கிறது.

நவீன மருத்துவம் என்னதான் பல நிலைகள் தாண்டி முன்னேறி இருந்தாலும், புற்றுநோயை மருத்துவ அறிவியல் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றிகண்டிருந்த போதிலும், இந்திய மக்களைப் பொறுத்தவரை புற்றுநோய் என்பது உயிருக்கு ஆபத்தானதாகவே பார்க்கப்படுகிறது.

ஆகவே புற்றுநோய் பற்றிய சரியான புரிதலும் விழிப்புணர்வும் அவசியமாகிறது. ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மூலம் கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்திவிட முடியும்.

முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகள் கூட உரிய நேரத்தில் எடுத்த சிகிச்சையினால் குணமடைந்துள்ளனர்.

பெரும்பாலான புற்றுநோயாளிகளுக்கு இருக்கும் மற்றொரு பயம், மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தது. நவீன மருத்துவம் பக்கவிளைவுகளை கணிசமாக குறைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வருட ரோஸ் தினம் ‘எங்களுக்கு தடைக் கற்களும் படிக்கற்களே’ என்ற கருத்தாக்கத்துடன் கொண்டா டப்படுகிறது.nரோஸ் தின விழாவை முன்னிட்டு கேஎம்சிஹெச் புற்றுநோய் மையம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கேஎம்சிஹெச் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புற்றுநோயாளிகள் உதவிக் குழு உறுப்பினர்கள் கேஎம்சிஹெச் உடன் இணைந்து உருவாக்கிய புற்றுநோயாளிகளின் அனுபவம் மற்றும் கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் உள்ள உலகத்தரமான சிகிச்சை வசதிகளை விவரிக்கும் வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டது.

கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தலைமை வகித்து துவக்கிவைத்தார். பட்டிமன்ற புகழ் மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தமிழ்செல்வன், கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.

புற்று நோய் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுப்ரமணியம் வரவேற்றார்.
கேஎம்சிஹெச் புற்றுநோய் சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஃபிரோஸ் ராஜன், டாக்டர் டி. ராஜசேகர், டாக்டர் மதுசாய்ராம், டாக்டர் பரத் ரங்கராஜன், டாக்டர் விக்னேஷ் கந்தகுமார், டாக்டர் ரமாபிரபாஹரி, டாக்டர் அன்புக்கனி சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 250 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத் தினர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img