சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் மற்றும் மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள் சூலூர் விமானப்படை தளம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பேரூராட்சி, பல்லடம் ஒன்றியங்களை சார்ந்த 155 ஊரகக் குடியிருப்புகளுக்கான ரூ.241 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை திறந்து வைத்தார்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நேரலை நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார். அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், தலைமை பொறியாளர் செங்குட்டுவன் ஆகியோர் உள்ளனர்.



