fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, உன்னத் பாரத் அபியான்/சமூக மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி வணிகவியல் துறை ஆகியவை சார்பில் நேற்று (10ம் தேதி) ஆரோக்கியபுரம் VVD பள்ளியில் நடத்தப்பட்டது.


வணிகவியல் துறை (எஸ்.எஸ்.சி.,) மாணவர்கள், ‘சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேச்சு மற்றும் குறும்படங்களை நடத்தினர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடல்கள், நடனம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. புனித மேரிஸ் கல்லூரியின் வணிகவியல் துறையால் (SSC) பள்ளியில் ஒரு சிறப்பு பசுமைத் தோட்ட இயக்கமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

வணிகவியல் துறையின் (SSC) ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பி. மரியா சஹாயா ரோசியானா மற்றும் வணிகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர். ஜே. ஏஞ்சல் பியூலா கிரேசலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மொத்தம் 30 துறை மாணவர்கள் சமூக மேம்பாட்டுத் திட்டத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தினர். SSC). பள்ளியில் இந்த நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்த VVD பள்ளி தலைமை ஆசிரியை ஜெயவேணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img