தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், குப்புசெட்டிப்பட்டியில் பாரதி இளைஞர் நற்பணி மன்றம் ஒருங்கிணைப்பில் குழந்தைகள் தின விழா மற்றும் நேரு யுவ கேந்திரா சங்கேதன் ஸ்தாபன நாள் விழா நடைபெற்றது.
இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டுரை, பேச்சுபோட்டி, விளையாட்டு போட் டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டுப்புத்தகங்கள், மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் சங்க மாநில செயலாளர் எம்.முருகசாமி, முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, நல்லம் பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரிபெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் மணி, சக்தி, ஒன்றிய குழு உறுப்பினர் இராமஞ்சலிசக்தி, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் மாதப்பன், பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.



