fbpx
Homeபிற செய்திகள்குறைதீர் கூட்டத்தில் 266 மனுக்கள்: நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

குறைதீர் கூட்டத்தில் 266 மனுக்கள்: நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

இலவச வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 266 மனுக்கள் பெறப்பட் டன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவ.8) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பொதுமக் களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து இலவச வீடு 172, வீட்டுமனைப் பட்டா 48, வேலைவாய்ப்பு 17, மற்றவை 39 என மொத்தம் 266 கோரிக்கை மனுக்கள் வந்தன. சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, குறித்தகாலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளில் உயரிழந்த 4 நபர்களின் குடும்பத்தாருக்கு தலாரூ.1 இலட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையினை ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.லீலா அலெக்ஸ், தனித்துணை ஆட்சியர் முருகேசன் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img