கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வடவள்ளி, ஓம்கணேஷ் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, உதவி பொறியாளர்கள் முரளிதரன், சவிதா, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.