நீலகிரி மாவட்டம், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று (ஆக.12) திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
குன்னூர் லாலி அரசு மருத்துவமனை மிகவும் பழமை வாய்ந்த அரசு மருத்து வமனைகளில் ஒன்றாகும்.
இம்மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்போது ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்டுள்ளது. இப்பணியை கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, ராதிகா சாஸ்திரி வாயிலாக செய்து கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்று பொதுமக்களின் பயன்பாட் டிற்காக அவசர சிசிக்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ராதிகா சாஸ்திரி, கேட்டர் பில்லர் நிறுவனத்தின் சார்பில், கொரோனா தடுப்பூசி பெற்று வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது குன்னூர் வாழ் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொரோனா நோய்த் தொற்றினை பொறுத்தவரை, நமது மாவட்டம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் பொது மக்களுக்கு தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், முறையாக முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடை வெளி கடைப்பிடித்தல் போன்று வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்ற வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறோம்.
தேயிலை தொழிற்சாலைகளை பொறுத்தவரை 100 விழுக்காடு கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இருப்பினும் வெளி மாநில தொழிலாளர்கள் தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.
அவர்களை அந்தந்த தொழிற் சாலை நிர்வாகத்தினர் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என கண் காணிக்க வேண்டும். அல்லது 14 நாட்கள் அவர்களை தனி மையில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யாத தொழிற்சாலைகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க குழு அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நிகழ்வின்போது, குன்னூர் உதவி ஆட்சியர் தீபனா விஷ்வேஸ்வரி, இணை இயக்குநர் மருத்துவ நலப்பணிகள் மரு.பழனி சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



