fbpx
Homeபிற செய்திகள்குன்னூரில் புதிய நீதிமன்ற கட்டிடம் திறப்பு

குன்னூரில் புதிய நீதிமன்ற கட்டிடம் திறப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தனித்தனியாக இயங்கி வந்த சார்பு நீதிமன்றம் உரிமையியல் நடுவர் நீதிமன்றம் குற்றவியல் விரைவு நீதிமன்றம் நேற்று ஒரே கட்டிடத்தில் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நடுவர் ஸ்ரீதர், குன்னூர் சார்பு நீதிமன்ற நடுவர் சந்திரசேகர், குற்றவியல் நடுவர் இசக்கி மகேஷ்குமார், குற்றவியல் விரைவு நடுவர் அப்துல், உரிமையியல் நடுவர் ராஜ்கணேஷ், மற்றும் குன்னூர் வழக்கறிஞர் சார்பாக வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img