Homeபிற செய்திகள்46,903 பேரின் ரூ. 529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வாழ்வில் ஒளியேற்றியதாக திருப்பூர் விவசாயிகள் புகழாரம்

46,903 பேரின் ரூ. 529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வாழ்வில் ஒளியேற்றியதாக திருப்பூர் விவசாயிகள் புகழாரம்

திருப்பூர் மாவட்டத்தில் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்ததாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும்விதமாக, கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 18.10.2021 அன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் விவசாயக் கடன் மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்திக்காக பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன.

பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் பயனடைந்த சரஸ்வதி கூறியதாவது:
நாங்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சின்னவீரம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தோட்டத்தில் பயிர் சாகுபடி செய்வதற்காக சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடனாக ரூ.82,746 பெற்றோம்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியினாலும், மழைப் பொழிவு போதிய அளவில் இல்லாததாலும், எங்கள் தோட்டத்தில் உள்ள கிணற்றிலும் பயிர் சாகுபடிக்காக தண்ணீர் போதிய அளவில் இல்லை.

எனவே, எங்களால் முழுமையாக பயிர் சாகுபடி செய்து வாங்கிய பயிர்க்கடனை திரும்பி செலுத்து இயலவில்லை. முதல்வர் தேர்தலின்போது, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி, முதல்வராக பொறுப்பேற்றவுடன், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, நாங்கள் பெற்ற ரூ.82,746 கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்து, எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அவருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அடமானத்துக்கு ரூ.3 லட்சம் கடன்
வட்டியில்லா பயிர்க்கடன் தனி நபர் கடன் ஜாமீன் பெயரில் ரூ.1.60 இலட்சமும், அடமானத்தின் பேரில் ரூ.3 இலட்சம் வரை வழங்கப்படுகின்றன. மேலும், கறவை மாடு, கன்று வளர்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் அனைத்துவிதமான விவசாய பயன்பாட்டிற்கு கடன்கள் வழங்கப்படுகின்றன.

முதல்வர் அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இதில், திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 22,371 நபர்களுக்கு ரூ.259 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் பயனடைந்த தமிழ்ச்செல்வி கூறியதாவது:
நாங்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சின்னவீரம்பட்டி பகுதியில் வசித்து வருகிறோம். கணவர் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு எங்கள் வயலில் நெல் சாகுபடி செய்வதற்காக, சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பயிர்க்கடனாக ரூ.92,589 பெற்றோம்.

மழைப் பொழிவு போதிய அளவில் பெய்யாததாலும், எங்கள் வயலில் உள்ள கிணற்றிலும், நெல் சாகுபடிக்காக தண்ணீர் போதிய அளவில் இல்லை. எனவே, எங்களால் முழுமையாக நெல் சாகுபடி செய்ய இயலவில்லை.

இதனால் நாங்கள் பெற்ற பயிர்க்கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் தவித்து வந்தோம். தேர்தலின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

அதன்படி, பதவி ஏற்றவுடன், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, நாங்கள் பெற்ற ரூ.92,589 கடனை தள்ளுபடி செய்து எங்களது வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளார். அவருக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

வெளியீடு:
செ.கு.சதீஸ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img