fbpx
Homeபிற செய்திகள்கவுண்டம்பாளையத்தில் தி.மு.க. நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

கவுண்டம்பாளையத்தில் தி.மு.க. நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை மாவட்டம், கவுண்டம்பா ளையம் ஜெய் நகர், மாநகராட்சி உயர்நிலை பள்ளி வளாகத்தில், தி.மு.க. சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை, மற்றும், உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

44 வது வட்ட திமுக, வாசன் கண் மருத்துவமனை, துளசி பார்மசி மற்றும் மக்கள் நல்லுறவு நலச்சங் கம் இணைந்து இந்த முகாமை நடத்தினர்.

சிறப்பு விருந்தினராக மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப் பாளர் பையா கிருஷ்ணன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் பொது மக்களின் கண்களில் உள்ள குறைபாடுகளைஅதிந வீன கருவிகளின் மூலம் கன்டறியப்பட்டு அவர்க ளுக்கு மேற்கொள்ள வேண் டிய சிகிச்சை முறைகள் மருத்துவர் கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முதியவர்களின், எலும்பு சார்ந்த பிரச்சனைகள், மூட்டு வலி, இடுப்பு வலி, எழும்பு தேய்வு, எழும்பு சார்ந்த பிரச்ச னைகள், பிரஷர், இரத்த அழுத்தம், சர்க்கரைநோய், பல் சிகிச்சை போன்ற பல்வேறு நோய்களுக்கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர், பையா கிருஷ்ணன், சாய்பாபா காலனி பொறுப்பாளர் ரவி, 44வது வட்ட கழக பொறுப் பாளர் குட்டி என்கின்ற ஜெயசந்திரன், மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர், நந்த குமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுக்ருல்லா பாபு, மற்றும் நிர்வாகிகளான எஸ்ஜி, சுரேஷ், வர்த்தக அணி அமைப்பாளர் தங்கவேலு, துணை அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஐடி விங்க் ஜெபக்குமார், வினோத் குமார், பிரதீப் குமார், பூபால் ஸ்டாலின், வட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர் வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img