Homeபிற செய்திகள்கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாவட்டம் சூலூர் பள்ள பாளையம் பேரூராட்சியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் பி. எஸ்.செல்வராஜ் தொடங்கி வைத்தார். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இம்முகாமில் சிறப்பம்சமாக பொது மருத்துவம் இருதய நோய் சிகிச்சை சர்க்கரை நோய், புற்றுநோய் காசநோய் காது மூக்கு தொண்டை மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு இந்த முகாமில் சிகிச்சை மற்றும் பரிசோதனை வழங்கப் பட்டது.

இதில் சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையம், இருகூர் ஆரம்ப சுகாதார நிலையம், சூலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல தனியார் மருத்துவமனை யை சேர்ந்த மருத்துவர்களும் பங்கு பெற்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை வழங்கினர்.நிகழ்வில் செயல் அலுவலர் ரவிக்குமார், பே.கபிலன், பள்ளபாளையம் நகர திமுக செயலாளர், பள்ளபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பி.கே சாமிநாதன், மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவக்குமார், டாக்டர் பாரூக், அதிமுக நகர செயலாளர் சண்முகம், வார்டு கவுன்சிலர் குணசேகரன் மற்றும் பள்ளபாளையம் பொது பணி இயக்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்முகாமில் 1500க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img