Homeபிற செய்திகள்‘கற்றுக் கொண்டு கற்பிப்பவர்களே சிறந்த ஆசிரியர்கள்’ அவினாசிலிங்கம் கல்வி நிறுவன விழாவில் பாலகுருசாமி பேச்சு

‘கற்றுக் கொண்டு கற்பிப்பவர்களே சிறந்த ஆசிரியர்கள்’ அவினாசிலிங்கம் கல்வி நிறுவன விழாவில் பாலகுருசாமி பேச்சு

நல்ல ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்லாது கற்றுக்கொண்டு, கற்பிக்கும் ஆசிரியர்களாகவும் இருக்க வேண்டும் என்று இ.பாலகுருசாமி பேசினார்.

கோவை, அவினாசிலிங்கம் மனை யியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனம் சார்பாக நேற்று (செப்.5) ஆசிரியர் தின விழா கொண்டாடப் பட்டது. மாணவர் துணைத்தலைவி லோகவர்ஷினி வரவேற்றார்.

பல்கலை. வேந்தர் பேராசிரியர் ச.ப.தியாகராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:
ஆசிரியர்கள் சமுதாயத்தில் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இளங்கலை முதுகலை முனைவர் பட்டங்கள் பெறவும், பல்வேறுத் துறைகளில் சிறந்தோங்கவும் ஆசிரியர்கள் ஊன்றுகோலாக இருக்கின்றனர்.

தலைமுறை மாற்றத்திற்கு ஏற்றவாறு அன்பு, அறிவு, கல்வி கொடுத்து மாண வர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இன்றைய கல்வித் தேவை என்பது திறன் மேம்பாட்டு கல்வியாக உருவெடுத்துள்ளது.

இதனையே தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. அவ்வகையில் நமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்கால திறன்மிகு மாணவர்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயலாற்றுகிறார்கள் என்றார்.

இபிஜி அமைப்பின் தலைவரும் முன்னாள் துணைவேந்தரும் இ.பாலகுருசாமி, “தேசத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் பேசியதாவது:

நல்ல ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்லாது கற்றுக் கொண்டு, கற்பிக்கும் ஆசிரியர் களாகவும் இருக்க வேண்டும். கற்று கொடுத்தலே வகுப்பறையின் அடித்தளமாக அமைகிறது. 75 ஆண்டு கால சுதந்திர நாட்டில் 75 சதவீதம் கல்வித் தரம் உயர்ந்துள்ளது.

கல்வி என்பது பண்பாட்டு உருவாக்கமாகவும், மனித நேய உருவாக்கமாகவும் அமைய வேண்டும். அவ்வகையில் இந்திய நாடு கல்வியை அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அனைவரும் இந்திய நாட்டின் ஆசிரியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் என்றார்.

துணைவேந்தர் முனைவர் வை.பாரதி ஹரிசங்கர் பேசுகை யில், எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியர்களை யும், தலைவர்களையும் உருவாக்குவ தில் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர் என்றார்.

பதிவாளர் முனைவர் சு.கௌசல்யா அனைத்துத்துறை ஆசி ரியர்களையும், மாணவர்களையும் பாராட்டினார். கலைநிகழ்ச்சிகளும், ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் மாணவிகளால் நடத்தப்பட்டன.
மாணவ மன்றத்தலைவி என்.அனுசியா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img