ராமேஸ்வரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன் தலைமையில், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாந்தோப்பு தெருவில் அமைந்துள்ள மனலோயா மனநல காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு, நகர் திமுக கழகம் சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது.
இதையடுத்து மேலவா சல் அருகாமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப் பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கட்சி பொறுப்பாளர் முத்துராமன், செந்தில் குமார், சுந்தரேசன், முரு கன், முரளி, சரவணன், நாகராஜன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



