தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (15 ம் தேதி) மதுரையிலும், நாளை (16 ம் தேதி) கோவையிலும் நேரடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை, நாளை மறுநாள் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
ஊழலற்ற, வெளிப்படையான, மக்கள் பங்கேற்புடன் கூடிய உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் செயல்திட்டம், வாக்குறுதிகளை விளக்கியும்; வேட்பாளர்களை ஆதரித்தும் கோவை, மதுரையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட் டுள்ளது.



