கனரா வங்கி சார்பில் நாளை (14.7.2021) மாபெரும் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன் மேளா நடக்கிறது.
இதில், 6.90 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் பெறலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு 659 ரூபாய் முதல் மாதத்தவணை செலுத்தி வீடு கட்ட, வாங்க மற்றும் புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது.
65 வயது வரை கடன் பெற்று. 75 வயது வரை திரும்பி செலுத்தும் வசதி உண்டு.
இதேபோல் 7.30 சதவீத வட்டியில், வாகன கடன் பெறலாம். வாகனத்தின் மதிப்பில். 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் அமைந்துள்ள கிளை, கோவில்பாளையம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள கிளை, கருமத்தம்பட்டி சோமனூரிலுள்ள கிளை, பொள்ளாச்சி காந்தி சிலை சிக்னல் அருகில் உள்ள கிளை ஆகிய கனரா வங்கிகளில் கடன் மேளா நடக்கிறது.
நிபந்தனைகளுக்குட்பட்டு கடன்களை பெற, மேற்கண்ட வங்கிகளுக்கு முறையே, 94422 03559, 88704 71159, 99429 22837, 94447 19376 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.