கொரோனா நோய்த்தொற்று காலத்தில் கடன் தொல்லை மற்றும் தொழில் பாதிப்புகாரணமாக தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:
வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களைப் பொறுத்தவரை இரண்டு தவ ணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை மாவட்ட எல் லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள எல்லைகளை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் இருக்கும் பகு திகளில் செயல்படும் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் படுகிறது.
மேலும் சாலையோரம் வசிப்பவர்கள், மனநலம் பாதிக் கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கோ வை மாவட்டத்தில் கொரோனா தொற்று முழுமையாக ஒழியவில்லை. மக்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டு இனிவரும் பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்.
அரசின் உத்தரவுக்கிணங்க வழி பாட்டுத் தலங்களுக்கு பண்டிகை நாட்களில் மக்களுக்கு தடை விதிக் கப்படுகிறது. வைரஸ் தொற்று காலத்தில் கடன் தொல்லை, வியாபார பாதிப்பு ஆகியவையால் தற்கொலைகள் அதிகமாக நடை பெறுகிறது.
அதனை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மை யம் செயல்படுகிறது. இக்காலக் கட்டங்களில் கடனை திருப்பி செலுத்துவதற்கு மக்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் என நிறுவனங்களிடம் கூறியுள்ளோம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.



