Homeபிற செய்திகள்ஒரே நேரத்தில் 10 வைபை சாதனங்களை இணைக்கலாம்: வி நிறுவனத்தின் “வி மிஃபி” அதிவேக இணைய...

ஒரே நேரத்தில் 10 வைபை சாதனங்களை இணைக்கலாம்: வி நிறுவனத்தின் “வி மிஃபி” அதிவேக இணைய தீர்வு

இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு பிராண்டான வி, தனது வி பேமிலி பிளான்ஸ் மற்றும் தனிநபர் போஸ்ட் பெய்ட் பிளான் திட்டங்களின் கீழ், தனது வாடிக்கையாளர்களுக்காக “விமிஃபி”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

“விமிஃபி” என்பது ஒரு பாக்கெட் சைசிலான 4ஜி ரவுட்டர் ஆகும். இது பல்வேறு சாதனங்களுக்கு பாதுகாப்பான நம்பகமான அதிவேக இணைய இணைப்பை வழங்குகிறது.

அதே நேரத் தில் பயணத்தின் போது, இணைய இணைப்பை விரும்புபவர்களுக்கும் மிக வும் ஏற்றது. “விமிஃபி” சாதனம் 150 அடி வரை அதிவேக இணைப்பை வழங்கக் கூடியது.

மேலும் மொபைல்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள், மடிக்கணினிகள், டேப்லட்டுகள், சிசிடிவி கேமராக்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் போன்ற 10 வைபை வசதி கொண்ட சாதனங்கள் வரை பாதுகாப்பாக இணைய இணைப்பு வழங்க வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய அணுகலுடன், “விமிஃபி” என்பது நுகர்வோருக்கு மதிப்பு மிக்க முன்மொழிவாகும். அது “எங்கிருந்தும் வேலை” அல்லது தரவு நுகர்வு அல்லது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என்பதாக இருக்கலாம்.

நேர்த்தியான, எடைக்குறைவான, “விமிஃபி” சாதனமானது உள்ளமைக்கப் பட்ட 2700 எம்எஹெச் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியுடன் கூடிய பேட்ட ரியுடன் வருகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 மணி நேரம் வரை தடை யில்லா இணைப்பை வழங்கும்.

ரூ.2,000 (வரிகள் உள்பட) விலையில், வாடிக்கையாளர்கள் “விமிஃபி” சாத னத்தை குடும்ப போஸ்ட் பெய்ட் திட்டத்துடன் கூடுதல் இணைப்பாக வாங்கலாம். வி குடும்ப திட்டத்தில் உறுப்பினர்களை மட்டுமின்றி “விமிஃபி”-ஐ யும் சேர்த்து அனைத்து எண்களுக்கும் ஒரே பில் பெறும் வசதியை அனுபவிக்கக் கூடிய குடும்பங்களுக்கு இது ஒரு தனித்துவமான பரிந்துரையாக இருக்கும்.

“விமிஃபி” சாதனம் தனிநபர் போஸ்ட் பெய்ட் திட்டத்துடனும் ரூ.399-க்கு கிடைக்கிறது.

அனைத்து முக்கிய சந்தைகளிலும் உள்ள 60 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வி கடைகளில் “விமிஃபி” கிடைக்கிறது.

“விமிஃபி” குறித்த மேலும் கூடுதல் விபரங்களுக்கு அணுக வேண்டிய இணை யதள முகவரி www.myvi.in/vi-mifi

படிக்க வேண்டும்

spot_img