இந்தியாவில் சுமார் 28.90 கோடி குடும்பங்கள் சமையல் காஸ் சிலிண்டர் பயன்ப டுத்துகின்றன.
இயற்கையாக கிடைக்கும் விறகையும், வரட்டியையும் அடுப்பு எரிக்க பயன்படுத்தி வந்த ஏழை, எளிய மக்களையும் ஆரோக்கியகேடு என்று சொல்லி சமையல் எரி வாயு பயனாளராக மாற்றியது ஒன்றிய அரசு.
இப்போது விலை உயர்வு என்ற பெயரில், அத்தனை குடும்பங்களையும் தவிக்க வைப்பதும் இதே ஒன்றிய அரசு தான்.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த மானியத்தை சப்தமே இல்லாமல் படிப்படியாக குறைத்து மானியமே இல்லாத நிலையை உருவாக்கி விட்டது. தற்போதைய பாஜக அரசு கச்சா எண்ணெய் என்பது முடிவுறு கனிமம்.
சில நாடுகள் அதன் மொத்த வணிகத்தையும் கையில் வைத்து கொண்டு உலகத்தை ஆள்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோலிய பொருட்களின் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.
முற்றிலும் இறக்குமதி சார்ந்தே இந்த வர்த்தகம் நடப்பதால் சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை சார்ந்தே விலை தீர்மானிக்கப்படுகிறது. அதன் எதிரொலியே இந்த விலை உயர்வு.
கடந்த ஆண்டு பெரிய நிறுவனங்களுக்கான வரியை 36 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக குறைத்தது ஒன்றிய அரசு. இதன் மூலம் 1.54 லட்சம் கோடி வருவாய் குறையும் என்றும் அறிவித்தது.
இப்படி பெரும் முதலாளிகளை பற்றி கவலைப்படும் ஒன்றிய அரசு ஏழை மக்களை பற்றி துளியும் கவலைப்படாதது வேதனையிலும் வேதனை.
வாங்குகிற மெழுகுவர்த்திக்கும், தீப் பெட்டிக்கும் கூட வரிகட்டும் இந்தியாவின் ஏழை, எளிய குடிமக்களின் அத்தியாவசியமாக இருக்கிற சமையல் எரிவாயுவுக்கு மானியம் கொடுக்க ஒன்றிய அரசு மறுப்பது ஏனோ? ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பு என் கிற மனப்பான்மை எப்போது மாறும்.



