சில்லறை விற்பனைக்கு முன்னுரிமையுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டிருக்கும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான, IIFL ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (IIFL HFL) தலா ரூ. 1,000 தோற்றமதிப்பு (FaceValue) கொண்ட பிணையமற்ற சார்நிலையான மீட்கக்கூடிய மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் (பிணையமற்ற NCDகள்) பொது வெளியீட்டை அறிவித்துள்ளது.
டிரான்ச் மி வெளியீட்டின் அடிப்படை வெளியீட்டு அளவு ரூ. 100 கோடியோடு (Base Issue Size) கிரீன் ஷூ அம்சமாக ரூ. 900 கோடி யுடன் மொத்தம் ரூ. 1,000 கோடி (Tranche I Issue) ஆக இருக்கும்.
சப்ஸ்க்ரிப்ஷனுக்கு ஆண் டுக்கு 9.60% முதல் 10.00% வரையிலான கூப் பன் விகிதங்களுடன் பல்வேறு விருப்பங்களை இந்தNCD வெளியீடு வழங்குகிறது.
டிரான்ச் மி வெளியீடு கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
வரும் 28-ம் தேதியோடு முடிவடைகிறது.
முன்கூட்டிய மூடல் அல்லது நீட்டிப்புக்கான விருப்பம் உண்டு.
இந்தப் பிணையமற்ற NCDகள் மூன்று வெவ் வேறு வரிசைகளின் கீழ் நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளன.
இவற்றிற்கு CRISIL AA / Stable மற்றும்BWR AA +/Negative(ஒதுக்கப்பட்டது) மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப் பீடுகள் நிதிசார் கட்டுப்பாடுகளுக்கு அதிகப் பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் மிகக் குறைந்த கிரெடிட் ரிஸ்க் கொண்டதாகக் கருதப்படுவதைக் குறிக்கிறது.
வெளியீட்டின் நிகர வருமானம், கடன் வழங்குதல், நிதியளித்தல் மற்றும் நிறுவனத்தின் தற்போதைய கடன்களின் வட்டியை திருப்பிச் செலுத்துதல் / முன்கூட்டியே செலுத்துதல் மற்றும் அசல் செலுத்துதல் ஆகியவற்றிற்காகப் பயன் படுத்தப்படும் மற்றும் மீதமுள்ளவை பொது நிறுவனங்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
மறுசீரமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளுக்கு ஏற்ப, கடந்த மார்ச் 31 நில வரப்படி, அதன் CRAR – அடுக்கு மி மூலதனம், 19.61% ஆக இருந்தது.
2006-ம் ஆண்டில் துவக்கப்பட்டு 2009-ம் ஆண்டில் தேசிய வீட்டு வசதி வங்கி (NHB)-ல் பதிவுசெய்யப்பட்டIIFL ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், IIFL ஃபைனான்ஸ் லிட்., நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள துணை நிறுவனமாகும்.
பலரது கனவுகளை மலிவு வீட்டுக் கடன்கள் மூலம், IIFL ஹோம் ஃபைனான்ஸ் நன வாக்குகிறது.