fbpx
Homeபிற செய்திகள்ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பாதிக்காமல் கால்வாய் அமைக்க கோரிக்கை

ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பாதிக்காமல் கால்வாய் அமைக்க கோரிக்கை

ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை குழு கூட்டத்தில் விவசா யிகள் கோரிக்கை விடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றிலிருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரி நீரை எண்ணேகொள் அணைக்கட்டின் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்திற்கு கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி கால்வாய் அமைப்பதற்கு போலுப்பள்ளி கிராமத்தில் அரசு, நிலங்களை கையகப் படுத்தி வருகிறது. இதில் பல விவசாய நிலங்கள் பாதிப்பதாகக்கூறி விவசாய நிலங்களை கால்வாய் அமைக்க வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கால்வாய் அமைக்க நிலம் எடுப்பதற்காக, மாவட்ட அளவிலான தனியார் நேரடி பேச்சு வார்த்தை குழுக்கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற போலுப்பள்ளியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களை கால்வாய் அமைக்க அரசுக்கு கொடுக்க முடியாது என்றும், மாறாக விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img