fbpx
Homeபிற செய்திகள்எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை கொரோனா நிவாரண நிதி ரூ.1 கோடி

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை கொரோனா நிவாரண நிதி ரூ.1 கோடி

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக இந்நிறுவனம் வழங்கியுள்ளது.


நேற்று கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமை நிர்வாக அலுவலர் சி.வி.ராம்குமார் ஆகி யோர் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

கோவையில் பொதுநலத்தோடு சமூக சேவையாற்றிவரும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே வறுமையால் வாடும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. 2020 ஆம் ஆண்டில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக இந்நிறுவனம் ரூ.70 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img