எல்.ஐ.சி. தன்ரேகா எனும் புதிய பாலிசியை, தென்மண்டல மார்க்கெட்டிங் மேலாளர் ஜி. வெங்கடரமணன் அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: தன்ரேகாவின் பாலிசி காலம் 20, 30, 40 வருடங்கள். பிரிமீயத்தை ஒற்றைத் தவணையாகவோ அல்லது 10, 15, 30 வருடங்களில் செலுத்தலாம்.
இது இளம் பெற்றோர்களுக்கு மிகவும் உகந்த பாலிசி. குழந்தைகளின் கல்வி, ஓய்வூதியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வருமான வரி விலக்கு பெறலாம்.
6-வது வருடபாலிசி காலத்தில் இருந்து ரூ.1000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.50 உத்தரவாத கூடுதல் தொகையாக வழங்கப்படும்.
21 முதல் 30 பாலிசி காலம் வரை மற்றும் 31 முதல் 40 பாலிசி காலம் வரை உத்தரவாதக் கூடுதல் தொகை முறையே ரூ.55 மற்றும் 60 வழங்கப்படும்.
வாழ்வு காலப் பயன்தவிர உத்தரவாத கூடுதல் தொகை இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
பலவிதமான விருப்பத் தேர்வுகள் அதாவது பிரிமீயம் செலுத்துவதில் விலக்கு, விபத்து, திறன் செயலிழப்பு பயன், டெர்ம் அஷ்யூரன்ஸ் பயன் மற்றும் இடர்தரும் நோய்களுக்கான பயன் ஆகியவை தன்ரேகாவை ஒரு முழுமையான பாலிசியாக்குகிறது.
வாழ்வு காலப்பயன் அளிக்கப்பட் டிருந்தாலும், முழுக்காப்பீட்டுத் தொகை அளிக்கும் முதல் மணிபேக் திட்டம் தன்ரேகா.
90 நாள் குழந்தை முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இப்பாலிசி கிடைக்கும். பிரிமீயம் செலுத்தும் தேர்வைப் பொறுத்து 80 வயது வரை ஆயுள் காப்பீட்டு பாது காப்பு கிடைக்கும். கடன் பெறும் வசதி இப்பாலிசியில் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
‘தன்ரேகா’வின் முதல் பாலிசியை, ஜி.வெங்கடரமணன் வழங்க, மருத்துவ மாணவர் கௌசிக் முருகன் பெற்றுக் கொண்டார். கோவை கோட்ட முதுநிலை மேலாளர் எம்.பிரசன்னன் நன்றி தெரிவித்தார்.
வணிக மேலாளர் எஸ்.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



