Homeபிற செய்திகள்என்ஜி பாரா மெடிக்கல் கல்லூரியில் சைக்கிள் கிளப் துவக்க விழா

என்ஜி பாரா மெடிக்கல் கல்லூரியில் சைக்கிள் கிளப் துவக்க விழா

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள என்.ஜி.இன்ஸ்டி டியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில், சைக்கிள் கிளப் துவக்க விழா, போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமை தாங்கி மருத்துவ மாணவர்களின் சைக் கிள் கிளப் பேரணியை, கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் தயாநிதி வரவேற்றார். கல்லூரி தலை வர் டாக்டர் மனோகரன் முன்னிலை வகிதது பேசும்போது, கோவை மாவட்டத்தில் கல்லூரிகளில் முதன் முறையாக சைக்கிள் கிளப் என்ற அமைப்பு என்.ஜி. பாரா மெடிக்கல் கல்லூரியில் துவக்கி உள்ளோம். மாணவர்கள் சைக்கிளை நாள்தோறும் பயன்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு படித்து முடித்து வேலைக்குச் செல்லும்போது, கிராமப் புற மக்களுக்கு சைக்கிளில் சென்று மருத்துவச் சேவையை வழங்கலாம்.

போதைப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெரும் கேடு உருவா வதோடு, பயன்படுத்துபவர் உடல் நலக்கேடும் ஏற்பட்டு பல்வேறு இன் னல்களுக்கு ஆளாவதை தவிர்க்க இந்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்ட் ரவிச்சந்திரன் பேசிய தாவது: மாணவர்களிடையே போதைப்பழக்கம் தற்போது அதிக ரித்திருப்பது வேதனைக்குரியது. சமு தாய சீரழிவுக்கு போதைப்பொருள் முக்கிய பங்களிக்கிறது.

இவற்றை தடுக்க படிக்கும் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதைப் பொருள் பயன்படுத் துவோரை கண்டறிந்து காவல்துறை கண்ட்ரோல் ரூம் தொடர்பு எண் 9498181212 தகவல் தெரிவிக்கலாம். அழைப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும்.

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக் கியம் அளிக்கும் விளையாட்டு சைக்கிள் ஓட்டுதல், சமுதாயப்பணி இவற்றில் கவனம் செலுத்தலாம் என்றார். போதைப் பொருள் பயன்பாடு குறித்து ஏற்படும் சீரழிவு குறித்து மாணவ, மாணவிகள் பேசினர்.

கல்லூரி நிர்வாக அலுவலர் சுபிகிருஷ்ணன், இந்தியன் ரயில்வே துறையின் பயிற்சித்துறை மேலாளர், தமிழ்நாடு சைக்கிள் கிளப் அசோசி யேசன் பயிற்சியாளர் அருண் ஆகி யோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img