ராமநாதபுரம் மாவட்டம் தொருவளூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் காளீஸ் வரி தலைமை தாங்கினார்.
கிராம தலைவர் மகாதேவன், செயல £ளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பிரியா, சுகாதாரத்துறை காந்திமதி, மின்வாரிய பொதுப் பணித்துறை, விவசாயத்துறை ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற செயலாளர் முனியசாமி ஊர் தீர்மானங்களை மக்கள் முன்னிலையில் நிறைவே ற்றினார். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் மற்றும் நகர துணைத் தலைவர் சதீஷ் மாணவர் அமைப்பு செய லாளர் கவின் ராகேஷ் ராமநாத புரம் ஒன்றிய செயலாளர் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பஜூருதீன் மீது மணல் கடத்தியதாக வழக்கு பதிவு செய்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினரை கண்டித்தும் ஊராட்சி மன்ற தலைவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீர்மானமாக நிறைவேற்ற ஊராட்சி மன்றத்தில் மனு அளித்தனர்.
அதனை ஏற்று வழக்கை ரத்து செய்யக் கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



