fbpx
Homeபிற செய்திகள்ஊரடங்கில் தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மழலையர் வகுப்புகள் திறப்பு? தியேட்டர்களில் 100% அனுமதி?

ஊரடங்கில் தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: மழலையர் வகுப்புகள் திறப்பு? தியேட்டர்களில் 100% அனுமதி?

தமிழக முதல்வர் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.

எனவே, ஜனவரி மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஓட்டல்கள், தியேட்டர்களில், ஜவுளி கடைகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியது. இதையடுத்து இரவு நேர ஊடரங்கு கடந்த 28ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

மேலும், பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட் டுள்ள கொரோனா கட்டுப் பாடுகள் பிப்ரவரி 15ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைய தொடங் கியுள்ளது. தற் போது, தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3,200க்கும் கீழ் சென்றுள் ளது. சென்னையிலும் 650க்கும் கீழ் உள்ளது. இதனால், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

வருகிற (பிப்ரவரி) 15-ம் தேதி வரை 16 வகையான தடை இன்னும் நீடித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கை 15-ம் தேதியில் இருந்து நீட்டிக்கும் போது என் னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பதை முடிவு செய்ய முதல்-வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம், பேரிடர் மற்றும் வரு வாய்த்துறை உயர் அதி காரிகள், போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு என் னென்ன தளர்வுகளை கூடுதலாக அறிவிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது.

தற்போது மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்படவும், அரசு, தனியார் கலை விழாக்கள், பொருட்காட்சிகள் நடத் தவும் தடை உள்ளதால் இதை விலக்கிக் கொள்ள அறிவிப்பு வெளியிட லாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.

உணவகங்கள், விடு திகள், ஓட்டல்கள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் சினிமா தியேட்டர்களிலும் 50 சதவீத பார்வையாளர்க ளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பா டுகள் அமலில் இருப்பதால் இதிலும் தளர்வுகள் அறி விக்கப்ப டலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது தேர்தல் பிரசார சமயமாக உள்ள தால் அரசியல் கூட்டங்கள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கலாமா? என்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எனவே இன்று மாலையில் இது சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இனியும் அதிக கட்டுப்பாடுகள் இருந்தால் சரிபடாது.

மக்களின் பொருளாதார வாழ்வாதார பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும். அது என்னென்ன தளர்வுகள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

படிக்க வேண்டும்

spot_img