உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளம்தலைமுறையினர் மலையாள மொழியை கற் கும் விதமாக அமிர்தம் மலையாளம் எனும் பயிற்சி வகுப்புகளுக்கான செயல் முறை திட்டம் வேர்ல்டு மலையாளி கவுன்சில் கோவை கிளை சார்பாக துவங்கப்பட்டது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என சுமார் 96 நாடுகளில் இந்திய மக்களின் பண் பாடு,கலாச்சாரம் ,கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைக் கும் விதமாக வேர்ல்டு மலையாளி கவுன்சில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மலையாள மொழி பேசும் இளம் தலைமுறையினர் தங்களின் தாய்மொழி குறித்த புரிதல் மற்றும் மொழியை கற்கும் விதமாக வேர்ல்டு மலையாளி கவுன்சில் கோயம்புத்தூர் கிளை சார்பாக அமிர்தம் மலையாளம் எனும் ஆன் லைன் மொழி பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
இதற்கான துவக்க விழா கோவை கேரளா கிளப் அரங்கில் நடைபெற்றது. வேர்ல்டு மலையாளி கவுன்சில் கோவை கிளை நிர்வாகிகள் ராஜேஷ் குமார்,பத்மகுமார்,மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மலையாளி சமாஜத்தின் தலைவர் ராஜகோபாலன், பத்திரிகையாளர் ஜெஷி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அமிர்தம் மலையாளம் ஆன்லைன் வகுப்புகளை உலகெங்கிலும் எடுத்து செல்ல சி.எம்.எஸ்.பள்ளியின் முதல்வரும், மலையாள மொழியை பல்வேறு தரப்பினருக்கும் பயிற்றுவித்து விருது பெற்ற இ.சி.பாபு துவக்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் வேர்ல்டு மலையாளி கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகிகள் ராஜன் ஆறுமுகம், விஜயன், ஜெயசங்கர்,வத்சலா வாரியர், வேணு கோ பால், ராதாமோகன், சசிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..



