fbpx
Homeபிற செய்திகள்உதட்டில் மச்சம் இருக்குமாம்: ‘ஜெசி’ பூனையை காணவில்லை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு

உதட்டில் மச்சம் இருக்குமாம்: ‘ஜெசி’ பூனையை காணவில்லை கண்டுபிடித்து கொடுத்தால் பரிசு

கோவை மாநகர பகுதியில் பூனை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுமென போஸ்டர் ஒட்டப்பட்டது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. கோவை ராமநாதபுரம் பகுதியில் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணியான பூனையை காணவில்லை என்பதால் கவலையடைந்த நபர் இதுகுறித்து போஸ்டரை ஒட்டியுள்ளார்.

அதில் “பெயர் ஜெசி, வயது ஆறு, அடையாளம் உதட்டில் மச்சம், நவம்பர் 29ம் தேதி முதல் காணவில்லை, நீங்கள் எங்கள் பூனையை கண்டீர்கள் என்றால் கீழ்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும், பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப் படும்“ என்று பூனையின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் கோவை மாநகர பகுதியில் ஒட்டியுள்ளார்.
இது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img