Homeபிற செய்திகள்உடல்நலக்குறைவுடன் பிடிபட்ட ஆண் புலிக்கு சிறப்பு கூண்டு

உடல்நலக்குறைவுடன் பிடிபட்ட ஆண் புலிக்கு சிறப்பு கூண்டு

வால்பாறை மானாம்பள் ளியில் ரூ.75 லட்சம் செலவில் புதிய கூண்டு அமைத்து, பிடிபட்ட புலியை வனத் துறையினர் பராமரிக்க உள் ளனர்.

கோவை மாவட்டம் வால் பாறையில் கடந்த செப்டம்பர் 2021-ம் ஆண்டு முத்து முடி பகுதியில் உடல்நலக்குறைவாக பிடிக்கப்பட்ட ஆண் புலியை, வனத்துறையினர் கடந்த 9 மாதங்களாக பாதுகாத்து வரு கின்றனர்.

தற்போது நல்ல நிலையில் புலி உள்ளதை அறிந்த தமிழக அரசு, ரூ.75 லட்சம் செலவில் அதற்காக புதிய கூண்டு அமைத்துள்ளது. டிடி.ராமசுப்பிரமணியம், டிஎஃப்ஓ கணேஷ், ஏசிஎஃப் செல்வம் தலைமையில், வால்பாறை மானாம்பள்ளி டாப்சிலிப் வனச்சரகர் மணிகண்டன், வெங்கடேஷ், காசிலிங்கம், மருத்துவர் ரமேஷ், மனோகரன், களக்காடு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புலிக்கு மயக்க மருந்து செலுத்தி அதைப் பிடித்தனர். பின்னர் புதிய கூண்டிற்கு அதனைக் கொண்டு வந்து அடைத்தனர்.

இக்கூண்டில், சிறப்பு அம்சமாக ஓய்வு அறை, தண் ணீர் தொட்டி, படுக்கை மரக் கூடாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் புலிக்கு கிடைக் கும். இதை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது சிறு குட்டியான இந்த ஆண் புலி 144 கிலோ உள்ளது.
வேட்டைத் தடுப்புக் காவலர்கள், புலிகள் சிறப்பு ஆர்வலர் ரமேஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img