ஈரோடு, ரங்கம்பாளையத்தில், கூட்டுறவுத் துறை சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல், புதிய ரேஷன் கடைகளை திறந்து வைத் தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திரா தலைமை வகித்தார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் கடந்த, ஒன்றரை ஆண்டு காலத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறார். குறிப் பாக, முதல், 4 மாத காலம் கொரோனாவால் கடுமையான சூழலை சந்தித்தார். அதனை சரி செய்ய, மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டார். அதன்பின், பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.
ஈரோடு மாவட்டத்துக்கு 85 திட்டங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளார்.
இங்கு நடந்த நிகழ்ச்சி, கடந்த மார்ச் 31-ல் சட்டசபையில் அறிவித் தபடி மகளிர் குழுவினருக்கான கடன் தள்ளுபடி, வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்பட் டுள்ளது.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் விரைவாக துவங்கப்படும். அரசால் செய்ய வேண்டிய பணிகளில் ஏற்பட்ட தாமதத்தை, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் அவை சரி செய்து பணி முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நாங்கள் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை வழங்க, முதல்வர் நடவ டிக்கை எடுத்துள்ளார். தற்போது அதற்கான ஒப்பந்ததாரர், பணியை விரைவாக முடித்து தர கேட்டுள்ளோம்.
தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதில், 6 பம்பிங் ஸ்டேஷன்கள் உள்ளன. 4-வது பம்பிங் ஸ்டேஷன் வரை, சோதனை ஓட்டத்தை முடித்து விட்டனர். இன்னும், 2 பம்பிங் ஸ்டேஷனில் சோதனை ஓட்டம் முடிக்க வேண்டும். அத்துடன், கிளை வாய்க்காலில் சென்று, குளத்தில் சென்று நிரம்பும் பணி, 15 நாட்களுக்குள் சோதனை ஓட்டமாக நிறைவு செய்யப்படும்.
ஈரோடு சி.என்.கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்து, அங்கு முன்னேற்றங்களை செயல்படுத்தி உள்ளார்.
மாநகரத்துக்குள் சாக்கடை, ரோடு என பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க இயலாது. நீண்ட காலமாக செய்யாமல் விட்டதால், தேங்கி கிடக்கிறது. அவற்றை ஒழுங்கு செய்ய, 1,000 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கி உள்ளார்.
இடைத்தேர்தல் வந்ததால் கால தாமதம் ஏற்பட்டது. இப்போது அவற்றை துவங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பணிகள் நிறைவு பெறும்போது, மாநகரில், 95 சதவீத பிரச்னைகள் தீர்க்கப் படும்.
பெண்களுக்கான உரிமைத் தொகை, 1,000 ரூபாயை மிக விரைவில் வழங்குவதற்கான உத்தரவாதத்தை முதல்வர் தெரி வித்துள்ளார். அதன்பின் முதல்வர், இத்திட்டத்தை திறந்து வைப்பார் என்றார் அமைச்சர் சு.முத்துசாமி.
அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட பஞ்., தலைவர் நவமணி உட்பட பலர் பங்கேற்றனர்.