fbpx
Homeபிற செய்திகள்இலவச அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

இலவச அப்பளம், ஊறுகாய், மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

கனரா வங்கியின் சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள புதுப்பு தூரில் அமைந்துள்ளது.

இங்கே மகளிருக்கான பல்வேறு விதமான சுய தொழில் பயிற்சிகள் மதிய உணவோடு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இது மத்திய மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது.

வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி 10 நாட்கள் கொண்ட அப்பளம் ஊறுகாய் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி தொடங்க உள்ளது.

இதற்கான முன்பதிவு இப்போது நடைபெற்று வருகிறது. வயது வரம்பு 18 முதல் 45 வரை. கல்வித்தகுதி 8-ம் வகுப்பு முதல்.

பயிற்சி முடிவில் அரசு சான்றிதழுடன் அரசு திட்டங்களின் மூலம் வங்கி கடன் பெற ஆலோசனையும் தொழில் முனைவோர் திட்டங்களும் எடுத்துரைக்கப்படும்.

கிராமப்புற BPL MGNREGS PIP AAY மகளிருக்கு முன்னுரிமை உண்டு. இதுவரை நடந்த பயிற்சிகளில் பங்கு பெற்ற அனைவருமே வேலை மற் றும் தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பயிற்சி மையத்தின் இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0422 2692080 அல்லது கைபேசி எண் 9489043926 -ல் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img