Homeபிற செய்திகள்இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்கள் பிரிவுபச்சார விழா

இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்கள் பிரிவுபச்சார விழா

கோயம்புத்தூர் மாவட் டம் இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப்பதிவாளர் / முதல்வர் நா. ஸ்ரீதர், பொள்ளாச்சி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகத்தின் துணைப் பதிவாளர் இராமலிங்கம் ஆகிய இரு அலுவலர்களின் பணி மூப்பு பிரிவு உபச்சார விழா நேற்று (ஜூன் 30) சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி கூட்ட அரங்கில் நடந்தது.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் இரா. இந்துமதி தலைமை தாங்கினார்.
கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் சிறப்புரை யாற்றினார்.

சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடியின் இணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் டி. பிரபு, சரக துணைப்பதிவாளர்கள் பெ.கிருஷ்ணன், நேர்முக அலுவலர் ராஜகோபால், கே.ஆர். ராஜேந்திரன், பொதுவிநியோகத்திட்டம், மத்திய கூட்டுறவு வங்கி யின் முதன்மை அலுவலர் பிராங்க்ளின் தாமஸ், மேட்டுப்பாளையம் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன் ஆகியோர் பணி மூப்பு அடையவுள்ள துணைப்பதிவாளர்களின் பணிகளைப் பாராட்டி பேசினர்.

அனைத்து சார்பதிவாளர்கள் மற்றும் துறை சார் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித் துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img