fbpx
Homeபிற செய்திகள்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி வரை சைக்கிள் பேரணி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி வரை சைக்கிள் பேரணி

அரசு காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு குறு தொழில் நிறு வனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது என்கின்ற 4 கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் மே1 ம் தேதி மாபெரும் கூட்டம் நடை பெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு கலந்துகொள்ள சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து சைக்கிள் பயணம் மேற் கொள்ளப்படுகிறது.

இந்த சைக்கிள் பயணக்குழுவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர்
சங்க மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலசுந்திர போஸ் தலைவராக பொ றுப்பு வகிக்கிறார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரி யார் படிப்பகம் முன்பு தொடங்கப்பட்ட இந்த பயண குழுவானது துடியலூர், ஆவாரம் பாளையம், சிங்காநல்லூர் வழியாக திருச்சி செல்கிறது.

இந்த சைக்கிள் பயணத்தை இந்திய ஜன நாயக வாலிபர் சங்க கேரள மாநில செயலாளர் தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர்க ளது கோரிக்கையை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்க அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், எஸ் எப்ஐ கோவை மாவட்ட செயலாளர் தினேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயண குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img