கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா சூலாமலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சபாநாயகராக கிளைச் செயலாளர் குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.
தேசியக் கொடியை ஊர் பெரியவர் மதியழகன் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றிய பிறகு அமைச்சராக பதவி ஏற்ற பவுன்ராஜ், மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி விளக்கியும், குறைகளையும் பேசினார்.
இந்த விவாதத்தில், ஊர் பொதுமக்கள் முனுசாமி, ரஜினி, மாதப்பன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றினர்.



