கோவை சிஎஸ்ஐ மேல் நிலைப்பள்ளியின் 190வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை திருமண்டல பேர £யர் திமோத்தி ரவீந்தர், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பேசியதாவது: கல்வி அறிவு மட்டுமின்றி மாணவர்களின் திறமை யை ஊக்குவித்து அதனை வெளிக்கொண்டு வரும் இடமாக இப்பள்ளி இருக்கின்ற காரணத்தால் தான் பண்புள்ள மாணவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களையும் நிர்வாகிகளையும் பாராட்டுகிறேன். பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களை வரவழைத்து பாராட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.
நம் கல்வியை பள்ளிக் கல்வி உயர் கல்வி என இரண்டாகப் பிரித்து இரண்டு கல்விக்கும் தனித் தனி அமைச்சர்களை உருவாக்கி நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கான பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.
கொரோனாவால் இரண்டு வருட காலமாக பள்ளி களைத் திறக்க முடியாத சூழ்நிலையில், மீண்டும் அவர்களுக்கு கல்வி புகட்ட இல்லம் தேடி கல்வி என்ற மிகப் பெரிய திட்டத்தை முதல்வர் உருவாக்கி இருக்கிறார்.
இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உற்று நோக்கும் ஒரு தலைவராக, இப்படியும் ஒரு முதல்வரால் பணியாற்ற முடியுமா என அனைவரும் நினைத்து பார்க்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார்.
மற்ற மாநில மக்களெல்லாம் நமக்கு ஒரு முத லமைச்சர் இப்படி கிடைக்கவில்லையே என்று ஏங்கும் வகையில் மிகச்சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்.
பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் பாராட்டும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.
ஒரு முதலமைச்சரை உயர் நீதிமன்றமோ உச்சநீதி மன்றமோ பாராட்டிய வரலாறு கிடையாது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலினை முதல்முறையாக நீதிமன்றம் பாராட்டி உள்ளது.
பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப் பட்ட நிலையில் தன் உடல்நிலை பற்றி கூட கவலைப்படாமல் தினமும் காலையிலும் மாலையிலும் களத்திற்கே சென்று மக்களை பாதுகாக்கும் வண்ணம் செயல்பட்ட முதல்வரை நான் என் வாழ்நாளிலேயே பார்க்கவில்லை.
பம்பரமாக சுழன்று பணியாற்றும் முதல்வரை தமிழ்ச் சமு தாயம் பெற்றிருக்கிறது.
திமுகவின் நோக்கமே அனைவருக்கும் கல்வி தான். அனைவரது படிப் புக்கும் ஏற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் என்ற லட் சியத்தோடு நமது முதல்வர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் எனக் கும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். என் னைத் தேர்ந்தெடுத்து நீயும் கிறிஸ்தவர்களின் குரலாக சிறுபான்மை மக்களின் குரலாக சட்டமன்றத்தில் என்னோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பை தந்தவர் தான் முதல்வர் ஸ்டாலின்.
இன்று சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினரின் குரலாக பணியாற்றி கொண்டு இருக்கிறேன். மாணவர்கள் மிக மகிழ்ச்சியோடு படிக்க வேண்டும்.
உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்புகள் எங்களுக்கு அப்போது கிடைக்க வில்லை. கிடைத்திருக்கும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் பல்வேறு நிலைகளில் உயரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



